நிர்வாகம் நமது சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுதிருந்தது. 20.09.2019 மாலை திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத் தரப்பில் சேர்மன், ஜி.எம், ஹெச்.ஆர்.எம் அவர்கள் கலந்து கொண்டனர்.
நமது மிக முக்கிய கோரிக்கையான, இரண்டு சங்க பொதுச்செயலாளர்களுக்கும் சேலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
Migration முடிந்ததும், அக்டோபர் இரண்டாவது வாரத்தில், ஜெனரல் டிரான்ஸ்பர்கள் போடுவதாக உறுதியளித்தது. நாம் கொடுத்த லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு கேட்டிருந்த கிளைகளுக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் நிர்வாகம் டிரான்ஸ்பர்கள் போட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அவைகளை சரி செய்வதாக நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
போதுமான ஆட்கள் இல்லாமல் புதிய கிளைகளை திறக்க வேண்டாம் என நம் கோரிக்கையை முன் வைத்தோம். குறைந்த அளவில் கிளைகளைத் திறக்க வேண்டியதிருக்கும் என நிர்வாகம் சொன்னது. Waiting listல் புதிய ஊழியர்கள் பணிக்குச் சேர்ந்த பிறகு, கிளைகளைத் திறக்கலாம் என வலியுறுத்தினோம்.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட மெஸஞசர்களுக்கு மார்ச் 31ல் இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும், அதற்கான அரியர்ஸ் கொடுக்க வேண்டும் என்றோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு 2011முதல் அரியர்ஸ் கொடுக்க வேண்டும் என்பதை சட்டரீதியாக ஏற்கனவே நிலைநாட்டியிருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
தற்காலிக மெஸஞசர்கள் அனைவருக்கும் தினக்கூலியாக 475/- கொடுக்கச் சொல்லி இருப்பதாக நிர்வாகம் தெரிவித்தது.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அரியர்ஸ் கொடுத்து விட்டதாகவும், அவர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்சு திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.
நமது தோழர்களுக்கு லீவு மறுக்கப்பட்டு, சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டது குறித்து பேசினோம். அவர்களுக்கு பிடிக்கப்பட்ட ஊதியம் திருப்பித் தர நிர்வாகம் சம்மதித்து உள்ளது.
Staff loans, TA, Leave உடனடியாக சாங்ஷன் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்தது. நாம் இன்னும் அவைகள் கால தாமதம் செய்யப்படுவதைச் சுட்டிக் காட்டினோம். விரைவில் சரிசெய்யப்படும் என உத்திரவாதம் தரப்பட்டது.
இன்னும் சில கோரிக்கைகள் குறித்து பர்சீலிப்பதாகவும், இன்னொரு நாள் விரிவாகப் பேசுவோம் என்றும் நிர்வாகம் சொன்னது.
Migration மிக முக்கியப்பணி, அது சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற நாம் ஒத்துழைக்க வேண்டும் என நிர்வாகத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிர்வாகத்தின் இணக்கமான அணுகுமுறையை நாம் பாராட்டி வரவேற்றோம். சில முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாம் அறிவித்த போராட்டத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் ஒத்தி வைக்கிறோம். Migration சுமூகமாக நடைபெற ஒத்துழைப்போம்.
தோழர்களே, நமது கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றஙகள் ஏற்பட்டு இருக்கின்றன. சாதகமான நிலைமைகள் ஏற்பட்டு இருக்கின்றன. சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
TNGBOA. Zindabad!
TNGBWU Zindabad!
AIRRBEA zindabad!!
J.மாதவராஜ். S.அறிவுடை நம்பி
GS- TNGBWU. GS- TNGBOA
Comments