வணிகம் பற்றி கவலைப்படும் நிர்வாகம் அது இங்கு பணிபுரிபவர்களின் கையில் தான் உள்ளது என்பதை புரிந்துகொள்


தோழர்களே

22.08.2019 அன்று புதிதாக பணியமர்த்தப்பட இருக்கும் scale 2 அலுவலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சியின் நிறைவு நாளில் அவர்களை நமது சங்கத்திலிருந்து தோழர்கள் அறிவுடைநம்பி, லூர்து ஆரோக்கியராஜ், ஆறுமுகப்பெருமாள், ராஜராஜன், கலைவாணன், ஷரத் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் அவர்களை நம் சங்க உறுப்பினர்களாக வேண்டினோம். அவர்களும் மகிழ்ச்சியோடு நம்மிடம் உரையாடினார்கள்.

இதனைத்தொடர்ந்து நாம் தலைமை அலுவலகத்திற்கு சென்று சேர்மன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நாம் வழங்கிய கோரிக்கைகளை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக தெரிவித்தோம். இத்தகைய நடவடிக்கைகள் நமது வங்கியின் தொழில் அமைதி மற்றும் வங்கி வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தோம்.

மேலும் நமது பொதுச் செயலாளரின் இடமாறுதல் குறித்து கேட்டபோது எப்பொழுதும் போல மௌனம் சாதித்தார். நிர்வாகம் பிரச்சனைகளை தள்ளிப் போடுவதாலும் பேச்சுவார்த்தை நடத்த காலதாமத படுத்துவதாலும் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்றும் அது மேலும் சிக்கலாய் மாறுமே தவிர முடிவுக்கு வராது என்றும் சேர்மன் அவர்களிடம் தெரிவித்தோம்.