top of page

பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு, மேலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என நிர்வாகம் முன்வரும் பட


தோழர்களே!

Recruitment நடத்தாமல் காலம் தாழ்த்தியது, அலவன்சுகள் குறித்த சர்க்குலர்கள் வெளியிடாமல் இருந்தது, தோழர் மாதவராஜ் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாக தொழிற்சங்க விரோத மனப்பான்மையுடன் explanation letter கொடுத்தது என்ற நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் கோரிக்கை அட்டை அணிந்தோம். அடுத்ததாக மே 29ம் தேதி சேலத்தில் தலைமையலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தோம்.

அதனைத் தொடர்ந்து நிர்வாகம் Recruitment பணியின் அடுத்தக் கட்டமாக certificate verificationக்கு கடிதங்கள் அனுப்பி இருக்கிறது. அலவன்சுகள் குறித்து சர்க்குலர் வெளியிட்டு இருக்கிறது. தோழர் மாதவராஜ் மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் இருக்காது எனவும் நம்பிக்கையளித்திருக்கிறது.

இன்னமும், அறிவிக்கப்பட்ட அலவன்சுகளில், கடன்கள் பெறும் தகுதியில் முரண்பாடுகள் சில இருக்கின்றன. நம் சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கு சேலத்திற்கு டிரான்ஸ்பர்கள் வழங்கவில்லை. தற்காலிக மெஸஞ்சர்களுக்கு வழங்கபப்டும் ஊதியத்தில் Uniformity இல்லை. அவைகள் குறித்து வங்கியில் ஆடிட்டிங் முடிந்தவுடன் பேசி, சுமூகமான நிலையை கொண்டு வந்து விடலாம் எனவும் நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது.

பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமல், மேலும் மேலும் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரும்போதுதான் நாம் போராட்டங்களுக்கு ஆயத்தமாகிறோம். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு, மேலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என நிர்வாகம் முன்வரும் பட்சத்தில் நாம் வரவேற்கவே செய்கிறோம். பிரச்சினைகளை சுமூகமாகவும் இணக்கமாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். எனவே மே 29ம் தேதி நாம் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைக்கிறோம்.

தோழர்களே!

தமிழ்நாடு கிராம வங்கியில் தொழிலாளர்களின் சக்தியாகவும், குரலாகவும் AIRRBEA இணைப்பு பெற்ற நம் சங்கங்களே இருக்கின்றன.

தமிழ்நாடு கிராம வங்கியில் ஊழியர்களின், அலுவலர்களின் பிரச்சினைகளை நாம்தான் எழுப்பினோம். முன்னுக்கு கொண்டு வந்தோம். அதில் முன்னேற்றங்களையும் கண்டிருக்கிறோம்.

இதுவே நாம் பாதை. தொடர்ந்து பயணிப்போம்.

(J.மாதவராஜ்) (S.அறிவுடைநம்பி)

GS –TNGBWU GS - TNGBOA


Comentarios


world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page