தோழர்களே!
நிர்வாகம் ஒப்புக்கொண்டது போல நமது இரண்டு சங்கத்தின் பொதுச்செயலாளர்களையும் சேலத்திற்கு டிரான்ஸ்பர்கள் செய்திருக்கிறது.
TNGBWU பொதுச்செயலாளர் தோழர் மாதவராஜ்க்கு மின்னம்பள்ளி கிளையும், TNGBOA பொதுச்செயலாளர் தோழர் அறிவுடைநம்பிக்கு ஆண்டகனூர் கேட் கிளையும் டிரான்ஸ்பர் போடப்பட்டு இருக்கிறது.
ஓரளவுக்கு நம் கோரிக்கையை நிறைவேற்றிய நிர்வாகத்தின் நடவடிக்கையை வரவேற்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சங்கத்தின் பொதுச்செயலாளர்களாக, சேலத்தில் தலைமையலுவலகம் இருக்கும் இடம் அருகில் டிரான்ஸ்பர் கேட்டால், சேலத்திலிருந்து 15 கி.மீ, 18 கி.மீ என, அரைமணி நேரம் பயண தொலைவில் – டிரான்பர் போடப்பட்டு இருப்பது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்கப் பணிகளுக்காக, இருக்கும் இடம் விட்டு, சேலத்திற்கு டிரான்ஸ்பர் கேட்டால், அங்கிருந்தும் தினமும் அரைமணி நேரம் போய் வருவதாய் டிரான்ஸ்பர் செய்திருப்பது முறையல்ல.
சேலம் டவுணுக்குள்ளேயே நான்கு கிளைகள் இருக்கும் போது, இப்படி சேலம் டவுணை விட்டு வெளியே டிரான்ஸ்பர் செய்திருப்பது நம் கோரிக்கையின் அர்த்தத்தை நீர்த்துப் போகச் செய்வதாக இருக்கிறது.
நிர்வாகம் இந்த டிரான்ஸ்பர்களை உடனடியாக மாற்றி சேலம் டவுணுக்குள்ளேயே இரண்டு பொதுச்செயலாளர்களுக்கும் டிரான்ஸ்பர் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். வலியுறுத்துகிறோம்.
J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி
GS – TNGBWU GS - TNGBOA
Commentaires