top of page

நமது சங்கம் தொடுத்த வழக்கும் அடுத்த கட்ட நகர்வுகளும்


ree

தோழர்களே! வணக்கம்.


நமது சங்கம் வழக்குத் தொடுத்ததன் அடிப்படையில், நமது தோழர்கள் செய்த Representationஐ ஏற்று நிர்வாகம் சிலருக்கு, Home Town அருகே உள்ள கிளைகளில் பணிபுரிய அனுமதித்து வருவதாக கேள்விப்படுகிறோம். அதற்கான மெயில்கள் தங்களுக்கு CM-HRM யிடமிருந்து வந்திருப்பதாக தோழர்கள் சொன்னார்கள்.

சில தோழர்களுக்கு Office exigencies என்று அனுமதிக்க இயலாது என தெரிவித்து CM-HRM யிடமிருந்து மெயில்கள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். தாங்கள் பணிபுரியும் parent Branch இருக்கும் இடங்களுக்கு பயணம் செய்வதற்கான பாஸ் (pass) வாங்க competent Authorityக்கு ஒரு


கடிதம் இணைக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள். இன்னும் சில தோழர்களுக்கு எந்த மெயிலும் CM-HRMயிடமிருந்து வரவில்லை என்று சொன்னார்கள். Home Town அருகே அனுமதி பெற்ற தோழர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்கள் கிளைகளுக்குப் பணிக்குச் செல்லலாம். அனுமதி மறுக்கப்பட்டவர்களில் சிலர் Parent Branchக்குச் செல்ல pass வாங்க முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள். Pass வாங்க வேண்டுமென்றால், பயணம் மேற்கொள்ளும் வாகனத்தின் Registration Number வேண்டும் எனக் கேட்கப்பட்டு இருக்கிறது. சொந்தமாக வாகனங்கள் இல்லாததாலும், வாடகைக்கு வாகனங்கள் அமர்த்த முடியாததாலும், அவர்களால் வாகனத்தின் Registration Number கொடுக்க முடியவில்லை. எனவே pass பெற முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வாகனங்களை நிர்வாகமே ஏர்பாடு செய்து அதற்கு பாஸ் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே parent branches செல்லும் சாத்தியம் இருக்கிறது. அதற்கான கடிதம் ஒன்றை விரைவில் தோழர்களுக்கு தெரிவிக்கிறோம். அதனை HRM-CM யிடமிருந்து வந்த மெயிலுக்கு REPLY ஆக அனுப்பி விடுங்கள். இன்னும் நிர்வாகத்திடமிருந்து மெயில் வராதவர்கள் காத்திருக்கவும். என்ன பிரச்சினை என்றாலும், தங்கள் அருகில் இருக்கும் சங்கங்களின் மண்டலச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களுக்குத் தெரிவியுங்கள். தோழமையுடன் J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி GS-TNGBWU GS-TNGBOA

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page