top of page

நமது எதிர்ப்பு சக்தி மட்டுமே நம்மை காப்பாற்றும், கொரோனாவிடமிருந்து மட்டுமல்ல, நிர்வாகத்திடமிருந்தும்

தோழர்களே! நிர்வாகத்தின் அடக்குமுறைகளும், அடாவடித்தனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இங்கு நம்மோடு பணிபுரிந்த தோழர் ஒருவரை இழந்து நிற்கிறோம். அவர் கோவிட்-19 தொற்றினால் இறந்திருக்கிறார் எனச் சொல்லக் கூட மறுக்கிறது நிர்வாகம். கொரோனா வைரஸ் தொற்று நம் வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. அதிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது நிர்வாகம். ஆனால் யார் யாரெல்லாம் கிளைக்கு எப்போது பணி புரிய வந்தார்கள், வராததற்கு என்ன காரணம் என்று கிளையின் மேலாளர்கள் portal மூலம் onlineல் தெரிவிக்கும்படி அவசரம் அவசரமாக நேற்று தலைமையலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த வங்கியில் onlineல் செய்ய வேண்டிய பணிகளை மெல்ல மெல்ல manual ஆக மாற்றி நமது workload ஐ நாளெல்லாம் அதிகரித்து வருகிறது இந்த நிர்வாகம். Agri incentiveஐ back endல் போடாமல் கிளைகளில் manual ஆக செய்யச் சொல்கிறது இந்த நிர்வாகம். ஊழியர்களும் அலுவலர்களும் பெற்ற வீட்டுக்கடன் வட்டி கணக்கீட்டை CBSல் மாற்றியமைக்க ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே மறுக்கிறது. அனைவர் கணக்கிலும் மாதா மாதம் வட்டி அதிகமாகச் சேர்கிறது. Moratorium periodஐ back endல்செய்யாமல் கிளைகளின் தலையில் சுமத்துகிறது இந்த நிர்வாகம். ஒரு விளங்காத HRM-portalஐ வைத்துக்கொண்டு இன்னமும் Staff leave particularsஐ online செய்யாமல் இருக்கிறது இந்த நிர்வாகம். அவ்வப்போது காணாமல் போய் விடும் நெட்வொர்க்கை சரி செய்ய துப்பற்று இருக்கிறது இந்த நிர்வாகம். கிளைகளுக்கு வேண்டிய அத்தியாவசிய ஸ்டேஷனரியை ஏற்பாடு செய்யாமல் நம்மைத் தவிக்க விடுகிறது இந்த நிர்வாகம். இந்த ஆக்கத்தில், இப்படி portal மூலம் வருகையைத் தெரிவிக்கும் ஏற்பாட்டை onlineமூலம் செய்வதில் மட்டும் ஏன் அவசரம் என்று நம் சங்கத்திலிருந்து CM-HRMயிடமிருந்து நம் சங்கத்தலைவர்கள் பேசினால், “யூனியனைக் கேட்டு நாங்கள் வங்கியை நடத்த முடியாது” என பித்துக்குளித்தனமாக பேசுகிறார். “நாங்கள் எங்களைக் கேட்டுத்தான் வங்கியை நடத்த வேண்டும் என்று ஒரு போதும் சொல்லவில்லை. வங்கியை முறையாக, சுமூகமாக நடத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். இந்த கொரோனா காலத்தில், போக்குவரத்து தடைப்பட்டு இருக்கும் நேரத்தில், வங்கிக்கு வந்து செல்வதே பெரும் பாடாய் இருக்கிறது. இப்போது எதற்கு இந்த Online attendance?’ என்றுதான் கேட்டோம். “ஏன் மேனேஜ்மெண்ட் உங்களை track செய்யக் கூடாதா? “ என கேட்கிறார் CM-HRM. புத்தி பேதலித்தவர்களிடம் என்ன சொல்வது? Track என்றால் வேவு பார்ப்பது. கண்காணிப்பது. நாம் எல்லோரும் இங்கு குற்றவாளிகளா? நோக்கமும் பார்வையும் சரியில்லை என்பது அவரது வார்த்தைகளிலேயே தெரிகிறது. தோழர்களே, இனி நாம்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த அதிகார வெறி கொண்டு அலையும், தங்கள் ஊழியர்களை வேவு பார்கக்த் துடிக்கும் அற்பத்தனங்களுக்கு, நாம் அவர்களுக்கு உறைக்கிற மொழியிலேயே பதில் சொல்வோம். இந்த Online attendance என்பதை நடைமுறைப்படுத்துவதிலும் நிறைய கோளாறுகள் இருக்கின்றன. அதில் sanctioned leave என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இங்கு எல்லாமும் முறையாக எழுத்து மூலமாக sanction செய்யப்படுகிறதா? அதை எப்படி தீர்மானிப்பது? நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலே இல்லை. Sanctioned or refused என்பதே எழுத்து பூர்வமாக கிடையாது. சொல்லாமல் கொள்ளாமல் போனால்தான் absent என்று போட முடியும். இங்கு அதற்கு என்ன வரையறை? எதையும் முறைப்படுத்தாமல், இதனை மட்டும் அமல்படுத்துவது அரைகுறையாக இருக்காதா? மேலும் ஒரு கிளையில் ஒரு மேலாளர் தெரிவிக்கும் attendance யாருக்கும் தெரியாது. எதோ சில முக்கிய காரணங்களால் ஒரு நாள் அந்தக் கிளையின் அலுவலரோ, ஊழியரோ வர சில நிமிடங்கள் தாமதமாகலாம். அவருக்கு absent போடப்பட்டு விடும். நிர்வாகம் அதற்கு விளக்கம் கேட்கலாம். சம்பளப்பிடித்தம் செய்யலாம். இது தேவையற்ற மன உளைச்சல்களையும், கிளைக்குள் அலுவலர்கள் ஊழியர்களிடையே ஒற்றுமையையும் இணக்கத்தையும் குலைத்து விடும். இது நிர்வாகத்தின் அப்பட்டமான சதி. நம்மை பிரித்தாளுவதற்கான சூழ்ச்சி. எனவே- நம் இரு சங்கங்களும் இந்த online attendance ஐ மேலாளர்கள் தெரியப்படுத்தும் நடைமுறையினை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டாம் என அறைகூவல் விடுக்கின்றன. நாம் நிர்வாகத்தின் முறையற்ற, அரைவேக்காட்டுத்தனமான, பழிவாங்கும் நோக்கம் கொண்ட இந்த வழக்கத்தை நிராகரிக்கிறோம். நிர்வாகத்துக்கு எதிரான நமது யுத்தம் இப்படியாக ஆரம்பமாகிறது. நம் தோழர்கள் இதில் முழு உறுதியைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம். ஊழியர்கள் நலனில் அக்கறையற்ற – ஊழியர்களின் பாதுகாப்பில் கொஞ்சம் கூட அக்கறையற்ற இந்த நிர்வாகத்துக்கு பாடம் புகட்டுவோம். நமது நிதானத்தையும், பொறுமையையும் இந்த நிர்வாகம் தவறாக நினைக்குமானல், அந்த கோணல் புத்தியை சரிப்படுத்துவதும் நமது பொறுப்பாகிறது. அதை செம்மையாகச் செய்வோம். நம் மேலாளர்கள் பணிபுரியும் அனைத்துக் கிளைகளிலும் porral மூலமாக online attendance தெரிவிக்கப்படாமல் முடக்குவோம். நம் வலிமையை உணர்த்துவோம். மேலும் அனைத்துத் தோழர்களும் பங்கேற்கிற ஒத்துழையாமை இயக்கத்தை விரைவில் அறிவிப்போம். நமது எதிர்ப்பு சக்தி மட்டுமே நம்மைக் காப்பாற்றும், கொரோனாவிடமிருந்து மட்டுமல்ல, நிர்வாகத்திடமிருந்தும்தான்! போர்க்குணமிக்க நமது சங்கத்தின் நாட்கள் திரும்பட்டும். வரலாறு மீண்டும் வீரியம் கொள்ளட்டும். தோழமையுடன் J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி GS-TNGBWU GS-TNGBOA

27 views0 comments

Yorumlar


world-spin-crop.gif
bottom of page