top of page

கடந்த காலங்களில் எத்தனை மண்டலக் கூட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை தர


தோழர்களே!

பாண்டியன் கிராம வங்கியில் சில better staff benefits, service condition-கள் இருப்பதை பட்டியலிட்டு, அதை தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என நாம் கோரிக்கை வைத்திருந்தோம். இந்தியன் வங்கி பொது மேலாளரும் அந்த better benefits-மற்றும் service condition- களை தமிழ்நாடு கிராம வங்கியில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இது பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்குமே நல்ல செய்தியாக இருக்கிறது. அனைவருமே வரவேற்று உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

ஆனால் AIBOC இணைப்புச் சங்கமான Pallavan GBOAவிற்கு மட்டும் அது நல்ல செய்தியாகத் தெரியவில்லை போலும்.

புதுவை பாரதியார் கிராம வங்கிக்கு இந்தியன் வங்கி ஸ்பான்ஸர் வங்கியாக இருக்கிறது. அங்கும் AIRRBEA சங்கங்களே மெஜாரிட்டியாய் இருக்கின்றன. அங்கென்ன சாதித்து விட்டார்கள் என்று Pallavan GBOA கேட்கிறது. அதாவது AIRRBEA சங்கங்களால் இந்தியன் வங்கியிடம் எதையும் சாதிக்க முடியாதாம். (வழக்கமான அவர்கள் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள்: It is a myth that AIRRBEA was able to get better benefit in Pandyan. AIRRBEA could not get results in Puduvai Bharathiyar and Sapthagiri, where it is in majority).

இப்போது ஒரு வருடத்திற்கு முன்புதான் புதுவை பாரதியார் கிராம வங்கியில் இருக்கும் ஆபிஸர்கள் சங்கம் AIRRBEAவில் இணைந்தது. அதற்கு முன்பு அது AIBOC-உடன் இணைந்திருந்தது. AIBOC சங்கம் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் அங்கு இருக்கும் அத்தனை மோசமான நிலைமைக்கும் அதற்கு முன்பு ரொம்ப காலமாய் AIBOC-ல் இணைந்ததே காரணமாயிருந்தது. இதை அங்குள்ள தோழர்களே சொல்லி வேதனையடைந்தார்கள்..

ஆனால் AIRRBEA வுடன் இணைந்த பிறகு, அவர்களது பல பிரச்சினைகளில் நாம் தலையிட்டு இருக்கிறோம். அந்த நிர்வாகத்துடன் AIRRBEA-TN சார்பாக பேசி இருக்கிறோம். NABARD Regional Officeல் பேசி ஆபிஸர்களின் சில பிரச்சினைகளை தீர்த்திருக்கிறோம். தலைமையலுவலகம் முன்பாக ஆரப்பாட்டம் நடத்தி, ஒரே அலுவலரிடம் இருக்கும் Joint custodian-களின் இரண்டு சாவிகளில், கிளரிக்கல் சாவியை சேர்மனிடம் ஒப்படைக்கப் போகிறோம் என்று அறிவித்தவுடன், அந்த மோசமான நடைமுறை வேகமாக சரி செய்யப்பட்டது. கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. Assistant Labour Commissioner (ALC) தலையிட்டு நிர்வாகத்திடம் சில கோரிக்கைகளை நிறைவேற்றச் சொன்னார். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகம் அதனை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது. இதோ இந்தியன் வங்கி பொது மேலாளரிடம் பேசி இருக்கிறோம். மேலும் காலம் தாழ்த்தப்படுமானால் போராட்டங்கள் நடக்கும். நிச்சயம் அவர்கள் வெல்வார்கள். புதுவை பாரதியாரில் AIBOC-னால் குனிந்து போயிருந்தவர்களை AIRRBEA நிமிர்த்தியிருக்கிறது. இந்த ஓரிரு வருடங்களில் அங்கு தொழிற்சங்க இயக்கம் சரியான நிலத்தில் துளிர் விட ஆரம்பித்து இருக்கிறது. அது பெரும் விருட்சமாகும். அதன் தோழர்களுக்கு கனிகளையும், நிழலையும் தரும்.

இப்படி புதுவை பாரதியாரிலும், பல்லவனிலும் வழங்கப்படாத better benefits-பாண்டியன் கிராம வங்கியில் வழங்கப்பட்டதற்கு காரணம் ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் generocity-யாம். (இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு generocity-இல்லை என்றும் சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதை கவனிக்கவும். அவர்களது வார்த்தைகளில்: It is IOBs generosity that resulted in few benefits in Pandyan that are better… )

பல்லவன் கிராம வங்கியில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்திற்கும் காரணம் அந்த Pallavan GBOA-தானாம். அவர்கள் தங்களுக்கே உரிய Professional approach-னால் isues-களை clinch செய்வார்களாம். (அவர்கள் வார்த்தைகளில்: our efforts are likely to bring more benefits. Count on our Association for Professional Approach in clinching issues). சரி அந்த professional approach ஏன் புதுவை பாரதியாரில் AIBOC சங்கமாய் மெஜாரிட்டியாய் இருந்தபோது வேலை செய்யவில்லை?

Pallavan GBOAவிற்கு எதோ complex வந்து அலைக்கழிக்கிறது.

நாம் ஒரு சக தொழிற்சங்கமாக சில விஷயங்களை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது இருக்கிறது. தொழிற்சங்கம் குறித்த சரியான புரிதலையும் பார்வையையும் ஏற்படுத்த வேண்டியது இருக்கிறது. அதுவும் நமது கடமைதானே!

முதலில் பாண்டியன் கிராம வங்கியில் இவ்வளவு சலுகைகள் பெற்றிருக்கிறோம் என்றெல்லாம் நம் AIRRBEA சங்கங்கள் எங்குமே தம்பட்டம் அடிக்கவில்லை. பல்லவன் கிராம வங்கியில் அந்த சலுகைகளை பெற முடியாமல் இருக்கிறார்கள் என்று மட்டம் தட்டவுமில்லை. பாண்டியனிலும், பல்லவனிலும் உள்ள AIRRBEA இணைப்புச் சங்கங்கள் அனைவரின் பார்வையே அது.

அச்சலுகைகள் தமிழ்நாடு கிராம வங்கியில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சில சலுகைகள் இன்னும் பெற முடியாமல் இருக்கிறோமே என்னும் துடிப்போடும் வேகத்தோடும் இருக்கிறோம். இதுதான் AIRRBEA சங்கங்கள். இனிமேலாவது பாண்டியன், பல்லவன் என்று பேசாமல் நாம் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களாகவும், ஆபிஸர்களாகவும் பார்க்கத் தொடங்கட்டும்.

இரண்டாவது பெற்ற சலுகைகளுக்கு தயவு செய்து நிர்வாகத்தின் generocity என்றெல்லாம் காது குத்தும் காரியங்களில் ஈடுபட வேண்டாம். எந்த நிர்வாகமும் மனமுவந்து தங்கள் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதில்லை. அல்லது சலுகைகளும், உரிமைகளும் நிர்வாகத்தின் கருணையால் போடப்படும் பிச்சையுமல்ல. எந்தக் கதவுகளும் தானாக திறப்பதில்லை. தட்டினால்தான் திறக்கப்படும்.

மூன்றாவது, ‘professional approach’னால் காரியங்களை சாதிக்க இதென்ன business-ஆ? எந்த தனிநபரின் சாமர்த்தியங்களாலும் சலுகைகளும் உரிமைகளும் பெறப்படுவதில்லை. கூட்டு பேர சக்தியால் (Collective bargaining) மட்டுமே தொழிற்சங்கங்கள் தங்கள் நிர்வாகத்திடம் காரியங்களை சாதிக்க முடியும். அந்த கூட்டு பேர சக்திக்கு அடிப்படையாய் இருப்பது தொழிலாளர்களின் ஒற்றுமையும், போராடும் குணமும்தான். இதிலென்ன professional approach வாழ்கிறது? Our approach is straight and struggle! இதைக் கற்றுக்கொடுத்தது AIRRBEA.

பாண்டியன் கிராம வங்கியில் இந்த சலுகைகளைப் பெறுவதற்கு, தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு பின்னால் எத்தனை போராட்டங்கள் இருந்ததென்று தெரிந்தால் Pallavan GBOA இப்படி பேசி இருக்காது. கடந்த காலங்களில்எத்தனை மண்டலக் கூட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை தர்ணாக்கள், எத்தனை பேச்சுவார்த்தைகள்! அந்த போராட்டங்கள்தான் அந்த சலுகைகளைப் பெற்றுத் தந்தது.

Struggle ahead – March on March on!

Victory ours – March on March on!

AIRRBEA – Zindabad!!!


5 views0 comments

Commenti


world-spin-crop.gif
bottom of page