தோழர்களே
05.11.2019 அன்று கோவை மண்டல அலுவலகத்தில் இருந்து அலுவலர் ஒருவர் ஒரு கிளை மேலாளருக்கு போன் செய்து 'இன்னும் ஏன் FRC அனுப்பவில்லை? இதையெல்லாம் உன்னால் அனுப்ப முடியாதா? நீ அனுப்பாததால் மொத்த வேலையும் கெட்டுவிட்டது. இது மனுசனுக்கு அழகில்லை. நீ எதுவும் பேச வேண்டாம். ஒழுங்கா அனுப்பி வை, முதல்ல போனவை.' என இன்னும் ஏதேதோ ஏக வசனத்தில் பேசியிருக்கிறார். கோயம்புத்தூர் மண்டல மேலாளரின் இயல்பும், குணமும், அந்த அலுவலருக்கும் தொத்திக் கொண்டு இருக்கிறது போலும்.
இதுபோன்ற மிரட்டல்களையும் மரியாதை குறைவாக பேசும் வசவுகளையும் இனியும் அனுமதிக்க முடியாது. அப்படி என்ன பெரிய இன்ஸ்பெக்சன் நடந்துவிட்டது? தனிப்பட்ட உயர் அதிகாரிகளின் சாதனைக்காக லோன் மேளாக்களில் மோசடியாக கொடுக்கப்பட்ட லோன்கள் தானே பெரும்பான்மையான கிளைகளில் NPA ஆகி இருக்கிறது. அவற்றையெல்லாம் இன்ஸ்பெக்சன் இல் பார்க்கிறார்களா? அவற்றையெல்லாம் விளக்கமாக குறிப்பிட இன்ஸ்பெக்டர் ஆஃப் பிராஞ்சுக்கு அனுமதி அளிக்கப்படுகிறதா? மோசடியாக NGOகள் தயவில் கொடுத்த லோன்கள் உள்ள கிளைகளை ஓரிரு நாட்களிலேயே inspect செய்ய வேண்டும் என அவசரப்படுத்துவது ஏன்? நிலைமை இப்படி இருக்க ஒருவர் FRC கொடுத்தவுடன் இவையெல்லாம் வசூல் ஆகிவிடுமா? ஒரு கிளை மேலாளருக்கு உள்ள பணிச்சுமையை கணக்கில் எடுக்க மாட்டார்களா?
யாரையோ திருப்திப்படுத்த, எதற்கோ கணக்கு காட்ட நடத்தப்படும் இன்ஸ்பெக்ஷன்களில் ஒரு கிளையில் FRC கொடுக்காததால் குடியா முழுகிப் போய் விடும்?
ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே பார்த்தால் ஈரும் பேனுமாம் என்பது போல் அல்லவா இருக்கிறது.
ஒரு செயலின் உண்மையான நோக்கத்தை கருத்தில் கொள்ளாமல் கணக்கு காட்டவும் காவடி எடுக்கவும் மட்டுமே செய்யும் செயல்கள் எந்த உருப்படியான பலனையும் தராது.
S.அறிவுடைநம்பி J.மாதவராஜ்
GS–TNGBOA GS-TNGBWU
Komentáře