"AIBOC சங்கமானது பேங்க் ஆபிஸர்களுக்கான பிரத்யேக Exclusive சங்கம். AIRRBEA சங்கமானது ஆபிஸர்கள், கிளரிக்கல், மெஸஞ்சர்களை உள்ளடக்கிய Composite சங்கம். Composite சங்கத்தில் ஆபிஸர்களின் நலன்களும், உரிமைகளும் காவு கொடுக்கப்பட்டு விடும். Composite சங்கத்தில் clerical dominate செய்கிறார்கள். இது ஆபிஸர்களுக்கு அவமானமில்லையா?"
பல்லவனில் இருக்கும் AIBOC இணைப்புச் சங்கம் தன் உறுப்பினர்களிடையே தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறது.
”Composite unions are ready to axe the interest of officer cadre to satisfy award staff. Shame on them to call themselves as officers association.”
“Award staff union office bearers dominate Officers association in composite union. For example employees union General Secretary is posting in whatsapp official messages of officers association in his name. Officers association is puppet in the hands of award staff GS. SHAME TO OFFICERS COMMUNITY.”
இப்படியாக தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் ஒரு பிரச்சாரத்தை முன் வைத்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு வங்கி அல்லது நிறுவனம் தனது நிர்வாக வசதிக்காக, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பல்வேறு அடுக்குகளாக பிரித்து வைக்கிறது. மெஸஞ்சர்கள், கிளரிக்கல், ஆபிஸர்கள் என ஸ்தானங்களை வகுக்கிறது. ஆனால் அங்கு அனைவரும் மாதா மாதம் ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் என்பதே மிகவும் அடிப்படையான உணமை.
இப்படி அடுக்கடுக்காய் பிரித்து வைப்பதில் ஒருவருக்கு அதிகமான ஊதியத்தையும் அடுத்தவருக்கு அதைவிடக் குறைவான ஊதியத்தையும், அதற்கும் அடுத்தவருக்கு அதை விடவும் குறைவான ஊதியத்தையும் கொடுக்கிறது. இந்த ஊதிய வேறுபாடுகளால், பொறுப்புகளின் தன்மையால் ஒருவர் உயந்தவராகவும், அடுத்தவர் தாழ்ந்தவராகவும் காட்சியளிக்கிறார்.
இந்த முதலாளித்துவ அமைப்பு மிக நுட்பமாக தொழிலாளர்களுக்குள் இப்படி பேதங்களை உருவாக்கி விடுகிறது. அதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் தொழிலாளர்களே என்னும் உணர்வு நீர்த்துப் போய், ஆபிஸர்களாக, கிளர்க்குகளாய், மெஸஞ்சர்களாய் தங்களைக் கருதும் சிந்தனை தலை தூக்குகிறது.
இந்த சிந்தனை நமக்குள் ஏற்படுவது முதலாளித்துவ அமைப்பின் வெற்றியாக கருத வேண்டும். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் தங்களைத் தொழிலாளர்களாக கருதி, அனைவரின் பிரச்சினைகளுக்காக அனைவரும் போராடுவது என்ற சிந்தனை மறைந்து ஆபிஸர்களுக்காக ஆபிஸர்கள் பேசுவது, கிளர்க்குகளுக்காக கிளர்க்குகள் பேசுவது என பிரிந்து போனால், எப்படி நமக்குள் ஒற்றுமை உணர்வு ஏற்படும்? நிர்வாகம் ஆபிஸர்களிடம் பேசும்போது கிளர்க்குகள் மீது பழி போடும். நிர்வாகம் கிளர்க்குகளிடம் பேசும்போது ஆபிஸர்கள் மீது பழி போடும். இறுதியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தொழிலாளர்கள் ஆபிஸர்களாகவும், கிளர்க்குகளாகவும் பிரிந்து மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் எதிரிகளாகவும் மாறிப் போவார்கள். நிர்வாகம் தனக்கு எந்த தடையும் இல்லாமல் உழைப்பைச் சுரண்டுவதிலும், உரிமைகளை மறுப்பதிலும் வேகமாக இறங்கும்.
இதனை புரிந்து கொண்ட சரியான தொழிற்சங்கங்கள் முடிந்த வரை, அனைவரும் தொழிலாளர்கள் என்னும் உணர்வை தக்க வைப்பதற்காக முயற்சிகள் எடுக்கின்றன. ஆபிஸர்கள், கிளர்க்குகள், மெஸஞ்சர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்டும் காரியங்களைச் செய்கிறது. அதில் ஒரு ஏற்பாடுதான் Composite சங்கம்.
AIRRBEA என்னும் composite சங்கம்தான் cadre வித்தியாசம் இல்லாமல் கிராம வங்கி ஊழியர்கள் அனைவரையும் உற்ற தோழர்களாய், அண்னன் தம்பிகளாய் உறவுகளை பேணச் செய்தது. தாய்ப்பாலைப் போல தன் உறுப்பினர்களுக்கு இந்த உறவை ஊட்டியது. அந்த ஒற்றுமையால்தான் கிராம வங்கி ஊழியர்களைத் தட்டி எழுப்பி, போராட வைத்தது. அனைவரும் cadre வித்தியாசமின்றி போராடியதால்தான் கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கியின் ஊதியம் 1987ல் சாத்தியமானது. ஆபிஸர்கள் தனியாய், கிளர்க்குகள் தனியாய் பிரிந்து கிடந்திருந்தால் இன்று வரைக்கும் நமக்கு வணிக வங்கி ஊதியம் கிடைத்தே இருக்காது.
வணிக வங்கியின் ஊதியம் கிடைத்த பிறகு, கிராம வங்கிகளில் தங்கள் சங்கத்தை ஏற்படுத்திய AIBOC சங்கம் ‘நாமெல்லாம் officers community, நாமெல்லாம் superior’ என்னும் விஷத்தை கிராம வங்கி ஊழியர்களுக்குள் ஊடுருவச் செய்தது. அவர்களின் உறுப்பினர்களாய் இருந்த கிராம வங்கி சேர்மன்கள், ஜீ.எம்களிடம், ‘AIRRBEA ஒரு composite சங்கம். அவர்களுடன் ஆபிஸர்கள் பிரச்சினையை பேசக்கூடாது’ என கோரிக்கை வைத்தது. அவர்களும் அதற்கு தலையாட்டினார்கள். அதன் பிறகே, கிராம வங்கிகளில் இருந்த AIRRBEA இணைப்புச் சங்கங்கள் அனைத்தும் ஆபிஸர்களுக்கென்றும், ஊழியர்களுக்கென்றும் தனித்தனியாக பிரிந்து கொண்டன. பிரிந்தாலும் தொப்புள் கொடி உறவைப் போல இணைந்தே செயல்பட்டு வருகின்றன. இப்போது இருப்பது Composite சங்கங்கள். ஒருவருக்கொருவர் Coordination கொண்ட சங்கங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிரித்தாலும் பிரியாத இந்த கூட்டமைப்புக்கு காரணம், எப்படியாவது ஆபிஸர்கள், ஊழியர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை பாதுகாத்து, அனைவரையும் தொழிலாளர்கள் என்னும் ஓரணியில் நிறுத்த வேண்டும் என்னும் துடிப்பே.
வணிக வங்கியில் தனித்தனி சங்கங்களும், cadre wise சங்கங்களுமாய் பிரிந்து நின்றதால்தான் பல உரிமைகளையும், சலுகைகளையும் இழக்க நேரிட்டது. அதைச் சரிசெய்வதற்காகத்தான் அனைத்துச் சங்கங்களையும், அனைத்து cadreகளையும் உள்ளடக்கிய தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்காகத்தான், United Forum of Bank Unions (UFBU) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இப்படி அனைத்துத் தரப்பட்ட தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க தொழிற்சங்கங்கள் சிந்திக்கும் போது, பிரயாசைப்படும்போது, AIBOC சங்கம் எதிர்த் திசையில் சிந்திக்கிறது.
அதற்கு அச்சங்கம் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று, Composite சங்கத்தில் ஆபிஸர்களின் நலன் விட்டுக் கொடுக்கப்படுமாம். உன்னிப்பாக கவனித்தால், எங்கே ஆபிஸர்களும், ஊழியர்களும் ஒன்றிணைந்து நிற்கிறார்களோ, அங்குதான் அனைவருக்கான உரிமைகளும், நலன்களும் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பல்லவன் கிராம வங்கியில் இருக்கும் பல தோழர்கள் அங்கு அடக்குமுறைகள் அதிகமாகவும், ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் நலன்கள் அலட்சியப்படுத்தப்படுவதாகவும் வேதனை கொண்டிருக்கிறர்கள். அதற்கு பிரதான காரணமே, அங்கு மெஜாரிட்டியாய் இதுவரை இருந்த AIBOC இணைப்புச் சங்கம், தன்னை Officers community என அறிவித்துக் கொண்டதும், ஊழியர்கள் சங்கங்களோடு இணைந்து நிர்வாகத்துக்கு எதிரான இயக்கம் நடத்தாத போக்கும்தான்.
பாண்டியனில் ஆபிஸர்கள் சங்கத்துக்கும், கிளரிக்கல் சங்கத்துக்கும் இருந்த பிணைப்பும், புரிதலும்தான், அங்கு ஓரளவுக்கு நிர்வாகத்தின் அடக்குமுறைகள் தடுக்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக சலுகைகள் பெறப்பட்டு இருக்கின்றன. தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்த தற்காலிக ஊழியர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்ததில் பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு, தனிப்பட்ட முறையில் சில ஆபிஸர்கள் அதற்காக பெரும் தியாகங்கள் செய்து இருக்கின்றனர். நாங்கள் Officers community என்று அவர்கள் ஒதுங்கி இருந்தால் பாண்டியன் கிராம வங்கியிலும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் சாத்தியமாகி இருக்காது.
எங்கே ஆபிஸர்கள், ஊழியர்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறதோ அங்கே தொழிலாளர்கள் பயனடைகிறார்கள். AIBOC சங்கம் அதற்குத்தான் வேட்டு வைக்க அலைகிறது.
‘ஆபிஸர்கள் சங்கத்தை கிளரிக்கல் dominate செய்கிறார்கள். இது அவமானம்’ என புழுங்கிப் போகிறது AIBOC சங்கம். தொழிற்சங்கத்தில் Cadre வித்தியாசம் கிடையாது. ஜனநாயக விதிகளின் படி அனைவரும் சமம். தன் அனுபவத்தாலும், அர்ப்பணிப்பாலும் சில தோழர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் முக்கிய பங்காற்றக் கூடும். அவர் ஆபிஸராக இருக்கலாம், கிளரிக்கலாக இருக்கலாம், மெஸஞ்சராகவும் இருக்கலாம். அங்கே அவர் தொழிற்சங்கத்தில் ஆற்றி வருகிற பொறுப்புக்கும், பணிக்கும்தான் மரியாதையே தவிர, அவர் வகிக்கும் cadreக்கு அல்ல. அதை dominate என்று பார்த்தால். பார்வையில் ஊனம் என்றே அர்த்தம்.
சரி, கிளர்க்கு dominate செய்கிறார் என துடிக்கும் AIBOC சங்கம் அவர்கள் வங்கி நிர்வாகம் அல்லும் பகலும் தங்களை dominate செய்கிறதே என ஒருபோதும் வருத்தம் கொள்வதில்லை. ஒருவரிடம் அடிமையாய் இருப்பதும், இன்னொருவரிடம் அதிகாரம் காட்டுவதும் ஒரு அடிமையின் இரண்டு முகங்களாய் இருக்கின்றன. நாம் அப்படியில்லை.
இந்த அமைப்பில் இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன. ஒன்று முதலாளி வர்க்கம். இன்னொன்று தொழிலாளி வர்க்கம். முதலாளித்துவ வர்க்கம் ஆள்கிறது. அதிகாரம் செலுத்துகிறது. தொழிலாளர் வர்க்கம் அடிமைப்படுத்தப்படுகிறது. சுரண்டப்படுகிறது. எனவே அனைத்து தொழிலாளர்களை ஒன்றிணைத்து நிறுத்த வேண்டியது தொழிலாளி வர்க்க பார்வையும் , கடமையும் ஆகிறது. அந்தக் கடமையை AIRRBEA செய்கிறது. AIBOC தவறுகிறது.
Workers Unity – Zindabad என்று கோஷங்கள் எழுப்புவதற்கும், Officers Unity Zindabad என்று மட்டும் கோஷங்கள் எழுப்புவதற்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு இருக்கிறது?
Comentários